
இறைநிலை விளக்கம் இந்த நூலில் முதன்மையாக மதிப்பளிக்கப்பட்டு விளக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தலைப்பில் எழுதப்பட்டிருக்கக் கூடிய உண்மைகளெல்லாம் மகரிஷியின் வாழ்வில் கண்ட உண்மைகளை வைத்துக் கொண்டே எழுதியவை ஆகும். மேலும் இந்த நூலில் முதன் முதலாக இறைத்தத்துவம் பற்றிய உலக அறிஞர்கள் கருத்துக்கு அடிப்படையில் ஒரு மாற்றம் இருக்கிறது. மகரிஷியின் நீண்டநாள் ஆராய்ச்சியினால் கண்ட உண்மைகள் இந்த நூலில் வெளியாகி இருக்கின்றன.