
அருள்நிதி மனோரமா சின்னசாமி அவர்கள் மகரிஷியிடம் தான் பெற்ற அனுபவங்களை மிகவும் எளிமையாகவும், வெகு நேர்த்தியாக தந்திருக்கிறார். அலை பாய்ந்து கொண்டிருந்த ஒரு உள்ளம் எப்படி அமைதியின் பரிபூரணத்தில் அடைக்கலமாயிற்று என்பதைத் தெள்ளத் தெளிவாக கொள்ளை வனப்போடு கூறுகிறது இந்நூல். ஆணவம் என்ற தறுக்குச் சிகரத்திலிருந்து சரணாகதி என்ற ஆன்ம பக்குவத்திற்குத் தான் வாழ்க்கை சென்ற யாத்திரையை இந்த இல்லத்தரசி சொல்லும் அழகு, ஒளிவு மறைவில்லாமல் பேசும் வெள்ளை உள்ளம் அனைவருக்கும் ஒரு ஊக்க சக்தியாக இருப்பது உறுதி.