
குடும்ப வாழ்வில் ஏற்படும் சிக்கல்களைப் போக்க, குடும்பத்தில் அன்பும், அமைதியும் நிறைவும் பெற வேண்டிய முறைகளை மகரிஷி அவர்கள் தர்க்க பூர்வமாக, அன்றாட வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை உதாரணம் காட்டி விளக்கியிருக்கிறார். தாய் சேய் நலம் பற்றிய சிறிய விளக்க உரை, மகரிஷியின் திருமண வாழ்த்து கவிகள், திருக்குறளின் இல்வாழ்க்கை, வாழ்க்கை துணைநலம் மற்றும் புதல்வரைப் பெறுதல் பற்றிய குறள்கள் ஆகியவை அடங்கிய வாழ்க்கை நல பெட்டகம். மணமக்களுக்கு நீங்கள் அளிக்க வேண்டும் என்றால், இது ஒரு உன்னதமான பரிசு. குடும்ப அமைதியை தரும்.