
குழந்தைகளின் உள்ளங்களில் அவர்களுக்கு வாழ் நாள் முழுவதும் வழிகாட்டியாகவும், அறிவின் முழுமையை நோக்கி வழி நடத்துவதாகவும் அமைந்துள்ளன மகரிஷியின் பாடல்கள். மிக எளிமையாகவும், குழந்தைகள் உள்ளம் பூரிக்கும் மெட்டில், தாங்கள் அன்றாடம் செய்ய வேண்டியவற்றை உணரும் வகையில் எழில் மிகு கவிதையில் மகரிஷி தருகிறார்கள். பெரியவர்களும் மனப்பாடம் செய்து வாழ்க்கையை செம்மைப்படுத்திக்கொள்ள பகிர்ந்துக் கொள்ளக் கூடிய கவிதைகள் இவை.